நெதன்யாகுவை கடத்த அமெரிக்காவிற்கு அழைப்பு விடுத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்
வெனிசுலா(Venezuela) ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை(Nicolas Maduro) அமெரிக்கா(America) கடத்தியது போல இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவையும்(Benjamin Netanyahu) அமெரிக்கா கடத்திச் செல்ல வேண்டும் என்று பாகிஸ்தான்(Pakistan) பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப்(Khawaja Asif) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், துருக்கியும்(Turkey) நெதன்யாகுவை கடத்த முடியும் என்றும் பாகிஸ்தானியர்கள் அதற்காக பிரார்த்தனை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய கவாஜா ஆசிப், நெதன்யாகு “மனிதகுலத்தின் மோசமான குற்றவாளி” என்று விவரித்துள்ளார்.
“கடந்த 4,000-5,000 ஆண்டுகளில் இஸ்ரேல் பாலஸ்தீனியர்களுக்கு(Palestinian) செய்ததை எந்த சமூகமும் செய்யவில்லை. நெதன்யாகு மனிதகுலத்தின் மிகப்பெரிய குற்றவாளி. உலகம் இதைவிட பெரிய குற்றவாளியை இதுவரை பார்த்ததில்லை” என்று ஆசிப் தெரிவித்துள்ளார்.





