ஆசியா

பாகிஸ்தானில் வேகமாக வறண்டு வரும் அணைகள் – நெருக்கடியில் பயிர் விதைப்பு பணிகள்

பாகிஸ்​தானில் உள்ள அணை​கள் வேக​மாக வறண்டு வரு​கின்​றன.

இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதன் காரண​மாக செனாப் நதி நீர் வரத்து திடீரென குறைந்​துள்​ளது.

பாகிஸ்​தான் விவ​சா​யிகளின் பயிர் விதைப்பு பணி​களில் இது கடும் நெருக்​கடியை ஏற்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

பாகிஸ்​தானின் இரண்டு முக்​கிய அணை​களாக ஜீலம் நதி​யின் குறுக்கே உள்ள மங்​களா மற்​றும் சிந்து நதி​யின் குறுக்கே உள்ள தர்​பேலா ஆகியவை உள்​ளன. இந்த அணை​களில் உள்ள நீரின் அளவு வேக​மாக குறைந்து அணைகள் வறண்டு வரு​கின்றன. இதற்​கு, பஹல்​காமில் நடத்​தப்​பட்ட தீவிர​வாத தாக்​குதலுக்கு பதிலடி​யாக செனாப் நீர் வரத்தை கட்​டுப்​படுத்த இந்​தியா எடுத்த நடவடிக்கை முக்​கிய காரண​மானது.

அணை​களில் போ​திய நீர் இருப்பு இல்​லாதது மே-செப்​டம்​பர் மாதங்​களில் கோடை விதைப்பு பணி​களுக்கு நீர் கிடைப்​ப​தில் சிரமத்தை ஏற்​படுத்​தும். அத்​துடன் இந்த மாதம் காரீப் பரு​வத்​தின் ஆரம்ப விதைப்பு பணி​கள் மேலும் மோசமடையக்​கூடும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்த சூழ்​நிலை​யில், ஒட்​டுமொத்த நீர்​வரத்​தில் 21 சதவீதம் அளவுக்கு பற்​றாக்​குறை ஏற்​பட்​டுள்​ள​தாக பாகிஸ்​தான் அறி​வித்​துள்​ளது.

செனாப் நதி​யில் இந்​தியா நீரோட்​டத்தை கட்​டுப்​படுத்​தி​யதை கருத்​தில் கொண்டு அணையி​லிருந்து வரும் நீரை சிக்​க​ன​மாக பயன்​படுத்த அணை அதி​காரி​கள் மற்​றும் நீர்ப்​பாசன விநியோக கண்​காணிப்பு நிறு​வனங்​களை பாகிஸ்​தான் ஏற்​கெனவே அறி​வுறுத்​தி​யுள்​ளது.

நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​யில் பரு​வ​மழை பெய்​யும் போது நிலைமை மேம்​படக்​கூடும். என்​றாலும், அடுத்த மாதத்​திற்​குள் பாகிஸ்​தானின் விவ​சாய நடவடிக்​கைகள் பெரு​மளவு, செனாப் நதி​யில் உள்ள அதன் சொந்த நீர்த்​தேக்​கங்​களான பாக்​லிஹார் மற்​றும் சலால் ஆகிய​வற்றை நம்​பியே உள்ளது. செனாப் நதி​யின் நீர்​வரத்து திடீரென குறைவது காரீப் பரு​வத்​தின் சாகுபடியை பெரிதும்​ பா​திக்​கும்​ என்​று அந்​த ஆணை​யம்​ கவலை​யுடன்​ குறிப்​பிட்​டுள்​ளது.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்