பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை கொன்ற பாகிஸ்தான் சகோதரிகள்

பாகிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை பழிவாங்கும் விதமாக தீ வைத்து எரித்ததற்காக இரண்டு இளம் சகோதரிகள் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பஞ்சாபி நகரமான குஜ்ரன்வாலாவில் தந்தை தாக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
“நிரந்தர தீர்வை’ கண்டுபிடிக்க அவர்கள் தங்களுக்குள் முடிவு செய்ததாக சிறுமிகள் தெரிவித்தனர்,” என்று நகரின் மூத்த காவல்துறை அதிகாரி ரிஸ்வான் தாரிக் குறிப்பிட்டார்.
பின்னர் அவர்கள் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலை எடுத்து, தூங்கிக் கொண்டிருந்த தந்தையை தீ வைத்து எரித்தனர்.
வளர்ப்பு சகோதரிகளான இந்த ஜோடி, தங்கள் தந்தை மூத்த பெண்ணை ஒரு வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வருவதாகவும், இரண்டு முறை இளைய பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும் தெரிவித்தனர்.
(Visited 28 times, 1 visits today)