தொப்பியில் எண் எழுதிய பாகிஸ்தான் வீரருக்கு 1.4 மில்லியன் அபராதம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான அமீர் ஜமால், தனது டெஸ்ட் தொப்பியில் ‘804’ என்ற எண்ணை எழுதியதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் அவருக்குச் 1.4 மில்லியன் அபராதம் விதித்திருக்கிறது.
முன்னதாக, கடந்த ஆண்டு அக்டோபரில் இங்கிலாந்துக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின்போது, அமீர் ஜமால் 804 என்ற நம்பர் எழுதியிருந்த தொப்பியை அணிந்திருந்தார்.
இந்த 804 என்ற எண்ணானது, சிறையிலிருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தானுக்கு ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கைதி நம்பரைக் குறிக்கிறது.
இதனால், கிரிக்கெட்டில் அரசியலைக் கொண்டுவந்து இம்ரான் கானை ஆதரித்ததாக அமீர் ஜமாலுக்குப் பாகிஸ்தான் ரூபாயில் 1.4 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
(Visited 2 times, 1 visits today)