ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் உஸ்மான் ஷின்வாரி

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான உஸ்மான் ஷின்வாரி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென இன்று அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக கடந்த 2013ம் ஆண்டு அறிமுகம் ஆன அவர் 34 போட்டிகளில் ஆடியுள்ளார்.
அதில் 17 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளும், 16 டி20 போட்டிகளில் விளையாடி 13 விக்கெட்டுகளும், ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடி ஒரே ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்காக 2013ம் ஆண்டு அறிமுகம் ஆனாலும் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் போராடினார். டி20 வடிவத்தில் அறிமுகம் ஆன அவருக்கு 2017ம் ஆண்டில்தான் ஒருநாள் போட்டிக்கான வாய்ப்பு கிடைத்தது.
அதில் தனது 2வது ஒருநாள் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் அவரால் பாகிஸ்தான் அணியின் முதன்மை பந்துவீச்சாளராக வரமுடியவில்லை.
ஷின்வாரி கடைசியாக கடந்த 2019ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் ஆடினார். அதன்பின் அணியில் இடம் கிடைக்கவில்லை.
6 வருடங்கள் காத்திருந்த அவர் இனி அணியில் வாய்ப்பு கிடைக்காது என்ற முடிவில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.