மூன்றாவது T20 போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கியநியூசிலாந்து 19.5 ஓவரில் 204 ரன்கள் குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் சேஸிங்கை தொடங்கியது. முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ஹசன் நவாஸ் 45 பந்தில் 10 பவுண்டரி, 7 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தும், சல்மான் ஆகா 31 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 4-வது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.