செய்தி விளையாட்டு

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது.

ஒருநாள் போட்டி தொடரில் ஜிம்பாப்வே, பாகிஸ்தான் அணி தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமனிலை வகித்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது. கம்ரன் குலாம் சதமடித்து 103 ரன்னில் அவுட்டானார். தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 50 ரன்கள் எடுத்தார்.

ஜிம்பாப்வே சார்பில் சிக்கந்தர் ரசா, ரிச்சர்ட் நரவா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

இதையடுத்து, 304 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீசி விக்கெட்களை இழந்தனர்.

கேப்டன் கிரெய்க் எர்வின் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்து 51 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

இறுதியில், ஜிம்பாப்வே அணி 40.1 ஓவரில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் ஒருநாள் தொடரை 2-1 கைப்பற்றியது.

இந்தப் போட்டியின் ஆட்ட நாயகனாக கம்ரான் குலாமும், தொடர் நாயகனாக சயீம் அயூபும் தேர்வு செய்யப்பட்டனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!