செய்தி விளையாட்டு

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்ற பாகிஸ்தான்

இலங்கை கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாட உள்ளது.

அந்தவகையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில்(Rawalpindi) மைதானத்தில் நடைபெற்றது.

நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 288 குவித்தது.

இலங்கை அணி சார்பில் ஜனித் லியனகே(Janith Liyanage) 54 ஓட்டங்களும் கமிந்து மெண்டிஸ்(Kamindu Mendis) 44 ஓட்டங்களும் சதீர சமரவிக்ரம(Sadeera Samarawickrama) 42 ஓட்டங்களும் பெற்றனர்.

இந்நிலையில், 289 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மட்டும் இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் அணி சார்பில் பாபர் அசாம்(Babar Azam) 102 ஓட்டங்களும் பகர் சமான்(Fakhar Zaman) 78 ஓட்டங்களும் மொஹம்மட் ரிஸ்வான்(Mohammad Rizwan) 51 ஓட்டங்களும் பெற்றனர்.

இறுதியில், பாகிஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

(Visited 1 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!