ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரபல ஆஸ்திரேலியா அணி டி20 தொடரில் விளையாடுகிறது.
அந்தவகையில், இன்று லாகூரில்(Lahore) முதலாவது டி20 போட்டி ஆரம்பமானது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாட தீர்மானம் செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்பிற்கு 168 ஓட்டங்கள் குவித்தது.
பாகிஸ்தான் அணி சார்பில், சைம் ஆயுப்(Saim Ayub) 40 ஓட்டங்களும் சல்மான் அகா(Salman Agha) 39 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்நிலையில், 169 ஓட்ட இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
ஆஸ்திரேலிய அணி சார்பில், கேமரூன் கிறீன்(Cameron Green) 36 ஓட்டங்களும் சேவியர் பார்ட்லெட்(Xavier Bartlett) 34 ஓட்டங்களும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது.





