துணிச்சலான முடிவு – இலங்கைக்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான்!
இலங்கை அரசு, இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஆகிய தரப்புகளுக்கு, பாகிஸ்தானிய செனட் தமது நன்றியைத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தின் போது, துணிச்சலாக மேற்கொண்ட முடிவிற்காக இவ்வாறு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், ஒற்றுமை மற்றும் மீள் தன்மைக்கான, இந்த நடவடிக்கையைப் செனட் உறுப்பினர்கள் பாராட்டியுள்ளது.
மேலும் ஒருமனதாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இலங்கையின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையிலான நீடித்த நட்பையும், பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை வலுப்படுத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது என்று குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 2 times, 3 visits today)





