இந்தியாவுடனான மோதலுக்கு மத்தியில் பால்ஸ்டிக் ஏவுகணையை சோதனை செய்த பாகிஸ்தான்!

இந்தியாவுடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் இன்றைய தினம் (03.05) பால்ஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது.
தரையிலிருந்து தரைக்கு ஏவும் ஏவுகணை 450 கிலோமீட்டர் (சுமார் 280 மைல்கள்) தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையானது துருப்புக்களின் செயல்பாட்டுத் தயார்நிலையை” உறுதி செய்வதையும், முக்கிய தொழில்நுட்ப அளவுருக்களை சரிபார்ப்பதையும் நோக்கமாகக் கொண்டது என்று இராணுவத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெற்றிகரமான ஏவுகணை சோதனைக்குப் பின்னால் உள்ள விஞ்ஞானிகள், பொறியாளர்களை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் பாராட்டியுள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)