T20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டன் மாற்றம்
2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. இதுவரை 8 டி20 உலகக் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன.
9-வது டி20 உலகக் கோப்பை போட்டி வருகிற ஜூன் 4-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக மீண்டும் பாபர் அசாம் தொடர்வார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாத நிலையில் பாபர் அசாம் 3 வடிவிலான கேப்டன் பதவியில் இருந்து விலகி இருந்தார்.
அவருக்கு பதிலாக டி20, ஒருநாள் போட்டிக்கான கேப்டனாக சஹீன் அப்ரிடி நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை நீக்கி மீண்டும் பாபர் அசாம் தொடர உள்ளார்.
(Visited 23 times, 1 visits today)





