பங்களாதேஷிடம் மண்டியிட்டது பாகிஸ்தான் அணி!
பாகிஸ்தான் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் ICC ODI பங்களாதேஷ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
ICC T -20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் அணி , பங்களாதேசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
டாக்காவில் இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி பங்களாதேஷின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
30.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 114 ஓட்டங்களை பாகிஸ்தான் பெற்றது.
இதையடுத்து 115 ஓட்டங்கள்எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
2ஆவது ஒருநாள் போட்டி நாளை மறுதினம் (13) நடைபெறவுள்ளது.





