பாகிஸ்தான் வணிக வளாக தீ விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு
பாகிஸ்தானின்(Pakistan) கராச்சியில்(Karachi) உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 80 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில், ஜின்னா(Jinnah) மற்றும் சிவில் மருத்துவமனைகளுக்கு இதுவரை 28 பேர் கொண்டு வரப்பட்டதாகவும், மேலும் 20 பேர் இன்னும் சிகிச்சையில் உள்ளனர், ஆனால் நிலையான நிலையில் உள்ளன என்றும் காவல் அறுவை சிகிச்சை நிபுணர் சம்மையா சையத்(Samaiya Syed) குறிப்பிட்டுளளார்.
மேலும், இதுவரை 18 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், மற்றவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சம்மையா சையத் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி





