பாகிஸ்தானில் தேவாலயங்கள் மீது தாக்குதல்! 100க்கும் மேற்பட்டோர் கைது
பாகிஸ்தானில் தேவாலயங்கள் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
கிழக்கு பாகிஸ்தானில் உள்ள ஒரு நகரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் தேவாலயங்களை எரித்ததையும், வீடுகளை சேதப்படுத்தியதையும் தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜரன்வாலாவில் இரண்டு கிறிஸ்தவ ஆண்கள் குரானில் இருந்து பக்கங்களை கிழித்ததாகக் கூறப்பட்டதால் வன்முறை வெடித்தது.

வரலாற்றுச் சிறப்புமிக்க சால்வேஷன் ஆர்மி தேவாலயம் கலவரத்தில் எரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் தெரிவிக்கப்படுகினறது.

ஜரன்வாலாவை உள்ளடக்கிய பைசலாபாத் மாவட்டத்தில் ஏழு நாட்களுக்கு பொதுக் கூட்டங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.





