பெரும் கடனில் தத்தளிக்கும் பாகிஸ்தான்
உயர் பணவீக்கத்தின் விளைவுகளை பிரதிபலிக்கும் வகையில், பாகிஸ்தான் அரசாங்கம் ஒரு வாரத்தில் 650 பில்லியன் ரூபாய்களுக்கு மேல் வங்கிகளில் இருந்து அதிகரித்து வரும் செலவுகளை ஈடுகட்ட கடன் வாங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) தரவு, ஜூலை 1 முதல் ஏப்ரல் 5, 2023-24 வரை, வணிக வங்கிகளிடமிருந்து அரசாங்கத்தின் கடன் 5.5 டிரில்லியன் என்ற சாதனையை எட்டியுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் இதே காலத்தில் ரூ.2.95 பில்லியனாக இருந்தது.
ஏப்ரல் 13-ம் திகதி அறிக்கையின்படி, கடந்த வாரம் மட்டும் வணிக வங்கிகளில் அரசு வாங்கிய கடன் தொகை 4.842 லட்சம் கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.
இதன்படி, அரசாங்கம் ஒரு வாரத்தில் 657 பில்லியன் ரூபா வரை 5.5 டிரில்லியன் ரூபா வரை கடனாகப் பெற்றுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாரியளவிலான கடன்கள் பொருளாதாரத்தை சுமைகளாக்குவதுடன், உள்நாட்டு கடன் வட்டி கொடுப்பனவுகளைத் தவிர வேறு வருமானத்தை ஒதுக்குவதற்கு இடமளிக்காது என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதன் விளைவாக, மொத்த வரவு செலவுத் திட்டச் செலவில் பாதிக்கும் மேலான தொகையை வட்டி செலுத்துவதற்காக அரசாங்கம் செலுத்த வேண்டியிருக்கும்.
பொதுவாக ஒரு நிதியாண்டின் கடைசி காலாண்டில், பொருளாதாரச் செயல்திறனுக்கான சிறந்த சித்திரத்தை வரைவதற்கு, பாகிஸ்தான் அரசாங்கம் வங்கிகளிடம் இருந்து பெருமளவில் கடன் வாங்குவதாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.