சுவிட்சர்லாந்தில் வாரத்தில் 4 நாள் வேலை!! சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு
சுவிட்சர்லாந்தில் வேலைநாட்களை நான்கு நாட்களாக குறைக்கும் ஆலோசனை திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருந்தது. இதன் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேர்ன் யுனிவர்சிட்டி ஆஃப் அப்ளைடு சயின்சஸ், ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம், இந்நிறுவனம் வாரத்தில் 4 நாள் வேலைசெய்யும் திட்டத்தை பல சுவிஸ் நிறுவனங்களுடன் இணைந்து குறுகிய வேலை வாரத்தின் நம்பகத்தன்மை பற்றி சோதிக்கும்.
காரணம், நிபுணர்களின் கூற்றுப்படி, சுவிட்சர்லாந்தின் வழக்கமான ஐந்து நாள், 42 மணிநேர வேலை வாரம், ஊழியர்களிடையே மன அழுத்தத்தை அதிகரிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
வேலை தொடர்பான மன அழுத்தத்தை குறைப்பதன் மூலம் ‘பொருளாதார ஆற்றலை’ மேப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இந்த திட்டம் சுவிட்சர்லாந்தில் கொண்டுவரப்படுவது இது முதல் முறை அல்ல. 2022 இல், இந்த யோசனை இடதுசாரி எம்.பி.க்கள் மத்தியில் ஆதரவைப் பெற்றிருந்தாலும், பொருளாதார வல்லுநர்கள் எதிராக வாதிட்டனர்.
ஆனால் பெல்ஜியம் இவ்வாறான நான்கு நாள் வேலை வாரத்தை அமல்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதனடிப்படையில் சுவிட்சர்லாந்திலும் இது சாத்தியப்படுமா என்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த முன்னோடி திட்டம் ஆறு மாதங்கள் நீடிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.