இந்தியாவிற்கான வான்வெளியை மூடிய பாகிஸ்தான் – 02 மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பு!
இந்தியாவுடன் மோதல் போக்கை கொண்டுள்ள பாகிஸ்தான் இரண்டு மாதங்களில் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க இந்தியா சிந்து நதி நீரை நிறுத்தியது.
அதைத்தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய விமானங்கள் பயன்படுத்த முடியாதபடி அதன் வான்வெளியை மூடியது.
இந்திய விமானங்கள் இயக்கப்படாததால் ஏப்ரல் 24 முதல் ஜூன் 30 வரை பாகிஸ்தான் 127 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது.
பாகிஸ்தான் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. இழப்புகள் இருந்த போதிலும் பாகிஸ்தான் விமான நிலைய ஆணையத்தின் ஒட்டுமொத்த வருவாய் 2019 இல் 508,000 டாலரிலிருந்து 2025 இல் 760,000 டாலராக அதிகரித்துள்ளது.





