செய்தி விளையாட்டு

அவுஸ்திரேலிய அணியை 9 விக்கெட்டுக்களால் வீழ்த்திய பாகிஸ்தான் அணி

அவுஸ்ரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 09 விக்கட்டுக்களால் அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.

9 விக்கட்டுக்களால் அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி அவுஸ்ரெலியாவில், எடிலைட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் இன்று இந்தப் போட்டி நடைநடைபெற்றது.

இதில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சுக்கு முகம்கொடுக்க முடியாமல் தடுமாறியதோடு, அணியின் முன்னனி வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

ஸ்டிவ் ஸ்மித் ஒருபக்கம் அணியின் ஓட்டத்தை அதிகரிக்க பொறுப்புடன் விளையாடியபோதும், இருந்தும் ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறியமையால், அவுஸ்ரேலிய அணியானது 35 ஓவர்களில் 163 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

பாகிஸ்தான் அணி சார்பாக ஹரிஸ் ரவுப் 05 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி 26.3 ஒவர்களில் 1 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

முதல் விக்கட்டிற்காக 137 ஓட்டங்களை பகிர்ந்த சயிம் அயுப் மற்றும் ஸபிக் முறையே 82 மற்றும் 64 ஒட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இதனால் 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என சமநிலையில் காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

(Visited 11 times, 1 visits today)

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி