பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் போர் : அமைதிக்கு அழைப்பு விடுத்த ரஷ்யா!
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தானுக்கு இடையில் போர் மூண்டுள்ள நிலையில், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அழைப்பு விடுத்துள்ளார்.
தாலிபான்களின் எல்லை தாண்டிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காபூல், காந்தஹார் மற்றும் பாக்டியா மாகாணங்களை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இதனை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், ஆப்கானிஸ்தானுடன் ‘வெளிப்படையான போரை’ அறிவித்து, அவர்களின் பொறுமையின் எல்லையை எட்டியதாகக் கூறினார்.
அத்துடன் மேற்படி தாக்குதலில் குறைந்தது 13 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரு நாடுகளும் எல்லை தாண்டிய தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி, இராஜதந்திர வழிமுறைகள் மூலம் தங்கள் வேறுபாடுகளைத் தீர்க்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.




