இந்தியா

131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகத்தைச் சேர்ந்த 14 பேர் உட்பட 131 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன், இந்தி நடிகர்தர்மேந்திரா, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, எழுத்தாளர் சிவசங்கரி உள்ளிட்டோரும் மேற்படி பட்டியலில் உள்ளனர்.

இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மார்ச் அல்லது ஏப்ரலில் நடைபெற உள்ள விழாவில் விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்குவார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு ஆண்டுதோறும் அறிவிக்கப்படும் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்று பத்ம விருதுகள்.

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஆகிய 3 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

கல்வி, இலக்கியம், அறிவியல், மருத்துவம், விளையாட்டு, சுகாதாரம், தொழில், வர்த்தகம், சமூக சேவைஉள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

Dila

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!