அபாய நிலையை எட்டும் பசிபிக் பெருங்கடல்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி
பசிபிக் பெருங்கடலின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் கரையோர தீவுப் பகுதிகள் வெள்ளம், மண் அரிப்பால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1993 ஆம் ஆண்டு பதிவான அளவீடுகளை தற்போதைய தரவுகளுடன் ஒப்பிட்டால், மேற்கு மற்றும் மத்திய பசிபிக் கடலின் நீர்மட்டம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பசிபிக் கடலின் மேற்பரப்பில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் மீன் வளம் மற்றும் பவள பாறைகள் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





