340,000 இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இலங்கையர்கள் 340,000 பேருக்கு இந்த வருடத்தினுள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் 311,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்காக செல்லும் இலங்கையர்கள் மிகுந்த கவனத்துடன் செயற்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
(Visited 13 times, 1 visits today)





