அசாமில் குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கையில் 400க்கும் மேற்பட்டோர் கைது
 
																																		அசாமில் குழந்தை திருமணங்களை தடுக்க அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கட்டமாக 3,483 பேர் கைது செய்யப்பட்டு 4,515 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் அக்டோபர் மாதத்தில் 915 பேர் கைது செய்யப்பட்டு 710 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில் 3ம் கட்டமாக நடந்த நடவடிக்கையில் 416 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்,குழந்தை திருமணத்திற்கு எதிரான போராட்டத்தை அசாம் தொடர்கிறது. டிசம்பர் 21, 22ந்தேதிகளில் இரவு தொடங்கப்பட்ட 3வது கட்ட நடவடிக்கைகளில், 416 பேர் கைது செய்யப்பட்டனர்.
335 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள். நாங்கள் தொடர்ந்து துணிச்சலான நடவடிக்கைகளை எடுப்போம். இந்த சமூகத் தீமையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்தார்.
கடந்த ஜூன் மாதம் நிஜுத் மொய்னா என்ற திட்டத்தை முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா அறிவித்தார். இதில் 11ம் வகுப்பு முதல் முதுகலை வரை படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
        



 
                         
                            
