இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
ஜூலை 01 முதல் 27 வரை இலங்கைக்கு 120,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதன்படி, ஜூலை மாதத்தில் மொத்தம் 1,23,503 சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
இந்த வருடத்தில் இதுவரை 748,377 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அமைச்சர் பெர்னாண்டோ மேலும் குறிப்பிட்டுள்ளார்





