இலங்கையில் வறட்சியால் 12,000 பேர் பாதிப்பு

2,295 பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 12,308 பேர், நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக தமது அன்றாட வாழ்க்கையைப் பாதித்து சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் வறட்சி காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், உயிரிழப்பு அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
இதற்கிடையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
(Visited 2 times, 2 visits today)