1000 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி – இருவர் கைது
1000 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக இருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் அதிகாரிகளினால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர்கள் இருவரும் ஓய்வுபெற்ற இராணுவ சார்ஜன்ட்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏயோன் லங்கா இன்வெஸ்ட்மென்ட் அன்ட் பிலிம் புரொடக்ஷன் அதிக வட்டி தருவதாக கூறி குருநாகல் ஹன்ஹமுனவில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தந்தாக தெரிவிக்கப்படுகிறது.
பணத்தை மோசடி செய்து சுமார் இரண்டு வருடங்களாக தலைமறைவாக இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகத்திற்குரிய வர்த்தகர் அதிக வட்டிக்கு தருவதாக கூறி ஹன்ஹமுனவில் உள்ள தனது வீட்டில் சம்பந்தப்பட்ட நிதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
அங்கு, ஒரு லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை, பல்வேறு தொகைகள் வைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களுக்கு வைப்பு செய்ய வேண்டிய வட்டி மற்றும் பணத்தை திருப்பி தராமல் இந்த பெரிய அளவிலான நிதி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.
சந்தேக நபர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாரியபொல நீதவான் ரசிக மல்லவராச்சி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.