ஆஸ்திரேலியா செய்தி

கட்டுக்கடங்காத காட்டுத்தீ: பற்றி எரியும் விக்டோரியா!

ஆஸ்திரேலியா, விக்டோரியா மாநிலத்தில் காட்டுத் தீ வேகமாக பரவிவருகின்றது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

வெப்ப அலை மற்றும் கடும் காற்றால் இன்று (09) காட்டு தீ வேகமாக பரவக்கூடும் என்பதால் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தீ விபத்துக்கு மத்தியில் இரு மூவர் காணாமல்போயுள்ளனர் என்று மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். அவர்கள் தீயில் சிக்கி உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகின்றது.

விக்டோரியா மற்றும் நியூ சவூத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களுக்கு இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளன.

காட்டுத் தீ பரவியுள்ள பகுதிகளில் தீயை அணைப்பதற்கு தீயணைப்பு படையினர் போராடிவருகின்றனர். விமானப்படையும் உதவி வருகின்றது.

2019 -2020 இல் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீயில் பேரழிவு ஏற்பட்டது. அதுபோன்றதொரு நிலைமை இம்முறை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!