வாகன தணிக்கைக்கு எதிர்ப்பு: இலங்கை பொலிஸார் விளக்கம்
அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட வாகனத் தணிக்கை நடவடிக்கையைத் தொடர்ந்து விபத்துக்கள் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க, 2024 டிசம்பர் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த விசேட நடவடிக்கை மிகவும் வெற்றிகரமானதாக இருந்தது.
உயிரிழக்கும் வீதி விபத்துக்கள் நாளொன்றுக்கு 04 முதல் 05 சம்பவங்கள் வரை குறைந்துள்ளதுடன், பாரதூரமான விபத்துக்கள் அல்லது கடுமையான காயங்களுக்கு உள்ளானவை 08-10 சம்பவங்களால் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பொதுப் போக்குவரத்து மற்றும் பிற வாகனங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் சாரதிகள் மற்றும் உரிமையாளர்கள் தமது வாகனங்களில் உள்ள அனைத்து சட்டவிரோத பாகங்களையும் அகற்றுமாறு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க மேலும் கோரியுள்ளார்.
இந்த வாகன நடவடிக்கையை பல்வேறு தரப்பினர் தடுக்க முற்பட்டாலும், சிறிலங்கா பொலிசார் அதனை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்