லண்டனில் அமைக்கவுள்ள சீன தூதரகத்திற்கு எதிர்ப்பு : எம்.பிகள் கூட்டாக வலியுறுத்தல்!
லண்டனில் அமைக்க உள்ள சீன தூதரகத்தை நிராகரிக்குமாறு தொழிற்கட்சி எம்.பி.க்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பிடத்தக்க பாதுகாப்பு கவலைகளை காரணம் காட்டி, இந்த சர்ச்சைக்குரிய திட்டத்தை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 09 எம்.பிகள் சமூக செயலாளர் ஸ்டீவ் ரீடிற்கு ( Steve Reed) கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.
பிரதமர் சீனாவிற்கு பயணத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக தூதரகத்தை அங்கீகரிப்பதற்கான அறிவிப்பு வரக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.





