UKவில் அறிமுகப்படுத்தப்படவிருந்த பிரிட் கார்டு” (Brit card) முறைக்கு எதிர்ப்பு!
பிரித்தானியாவில் தொழிலாளர்களுக்கான கட்டாய டிஜிட்டல் அடையாளத் திட்டத்திற்கான யோசனைக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலாளர்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை செய்யும் உரிமை சோதனைகளை கட்டாயப்படுத்தவுள்ளதாக பிரதமர் கெய்ர் ஸ்டாமர் கடந்த ஆண்டு அறிவித்திருந்தார்.
ஆனால் இந்த திட்டத்திற்கு அமைச்சர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த சோதனைக்கு மற்ற டிஜிட்டல் ஆவணங்களை பயன்படுத்த அவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
வேலை செய்யும் உரிமை இல்லாதவர்கள் வேலை தேடுவதை கடினமாக்கும் வகையில், “பிரிட் கார்டு” (Brit card) அறிமுகப்படுத்தப்படும் என பிரதமர் முன்னதாக அறிவித்திருந்தார்.
ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்யப்பட்ட டிஜிட்டல் பிரிட் கார்டு (digital Brit card), முறையானது தனிநபர் ஒருவர் இங்கிலாந்தில் வாழவும் வேலை செய்யவும் இருக்கின்ற உரிமையைச் சரிபார்க்க வடிவமைக்கப்பட்டுள்ளது,
இதன்படி முதலாளிகள் தாங்கள் பணியமர்த்த விரும்பும் எவரின் அட்டையையும் சரிபார்க்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் உள்துறை அலுவலகம் அனைத்து முதலாளிகளும் விதிகளுக்கு இணங்குகிறார்களா என்பதை இலகுவில் சரிபார்க்கும்.
இருப்பினும் இந்த திட்டத்திற்கு நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





