கல்வி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: கையொப்பம் திரட்டல் இன்று முதல்
கல்வி அமைச்சர் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகிறது.
புதிய கல்விச் சீர்திருத்தங்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.





