புயல் தொடர்பில் முன்பே அறிந்திருந்திருந்தும் மௌனம் காத்த எதிர்கட்சிகள்!
நவம்பர் 12 ஆம் திகதி முதல் புயல் குறித்த எச்சரிக்கைகளை எதிர்கட்சியினர் அறிந்திருத்தாகவும், ஆனால் அவர்கள் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தாமல் மௌனம் காத்து வந்ததாகவும் துணை அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில் புயல் குறித்த எச்சரிக்கையை அரசாங்கத்திற்குத் தெரிவிக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சி மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் கூறியது போல் நவம்பர் 12 ஆம் தேதி வானிலை ஆய்வுத் துறை அல்லது நீர்ப்பாசனத் துறை வெளியிட்ட புயல் குறித்த எந்த முன்னறிவிப்பும் அரசாங்கத்திற்கு கிடைக்கவில்லை என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
“எதிர்க்கட்சிகள், குறிப்பாக சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) ஆகியவை நவம்பர் 12 முதல் நவம்பர் 26 வரை 14 நாட்கள் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டிருந்தன. அவர்களில் யாரும் அதை நாடாளுமன்றத்தில் எழுப்பவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அத்தகைய பேரழிவைத் தடுக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு இருப்பது போலவே, எதிர்க்கட்சிக்கும் உள்ளது எனக் கூறிய அவர், அவர்கள் மக்களின் வாக்குகளாலேயே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




