பாகிஸ்தானில் நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த எதிர்க்கட்சிகள்
27வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக முதல் நாடு தழுவிய போராட்டங்களை பாகிஸ்தானில் உள்ள எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன.
இந்தத் திருத்தத்தில், கூட்டுப் பணியாளர்கள் குழுவின் (CJCSC) தலைவர் பதவியை நீக்குவதும், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDF) என்ற புதிய பதவியை அறிமுகப்படுத்துவதும் அடங்கும்.
பாகிஸ்தானால் கட்டுப்படுத்தப்படும் பிரதேசங்களில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்து, இந்தியா ஆபரேஷன் சிந்தூர் தொடங்கிய பின்னர் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த திருத்தத்தில் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்தை நிறுவுதல் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் செயல்முறையில் திருத்தங்கள் ஆகியவை அடங்கும்.
இந்தத் திருத்தம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) தலைமையிலான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான தெஹ்ரீக்-இ-தஹாஃபுஸ் அயீன்-இ-பாகிஸ்தான் (TTAP) கட்சி நாடு தழுவிய போராட்டங்களை அறிவித்துள்ளது.
மேலும், அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து, இந்தத் திருத்தம் அரசியலமைப்பின் அடித்தளத்தையே அசைக்கும் என்று தெஹ்ரீக்-இ-தஹாஃபுஸ் அயீன்-இ-பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.





