நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து எதிரணிகள் ஆராய்வு!
“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.”
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் SJP பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார Ranjith Madduma Bandara தெரிவித்தார்.
இது தொடர்பில் அனைத்து எதிரணிகளுடனும் கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் இன்று (28) கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய உரிமை மீறல், பாரபட்சம் உட்பட சில காரணங்களை அடிப்படையாகக்கொண்டே பிரேரணை முன்வைப்பது குறித்து கலந்துரையாடப்படுகின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிரணி கையொப்பம் திரட்டினாலும்அது இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





