யுக்திய நடவடிக்கை – 54000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பாரியளவிலான வெளிநாட்டு சிகரெட்டுகளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட அட்டைப்பெட்டிகளில் மொத்தம் 54,000 சிகரெட் இருந்ததாக STF தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் குற்றச் செயல்களை ஒடுக்குவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் எஹலியகொட குடாகம, தலவிட்டவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
48 வயதான சந்தேக நபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கடத்தல் பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக எஹலியகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)