இலங்கையில் 23000 பேருக்கு மட்டுமே அரச தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் – கைத்தொழில் பிரதி அமைச்சர்!

இலங்கையில் பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு வழங்குவதாக தாம் உறுதிமொழி வழங்கியதில்லை என கைத்தொழில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
சுமார் 23000 பேருக்கு மட்டுமே அரச தொழில் வாய்ப்புக்களை வழங்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரச முயற்சியான்மைகளுக்காக இந்த ஆண்டில் பெருந்தொகை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தனியார்துறை தொழிற்சந்தைக்கு பொருந்தக்கூடிய வகையில் நபர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரச தொழில் வாய்ப்புக்களை தொடர்ந்தும் வழங்கப்பட முடியாது எனவும் கடந்த அரசாங்கம், தொழில் வாய்ப்புக்களை அதிகளவில் வழங்கியதனால் வெற்றிடங்கள் இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 1 visits today)