இலங்கையில் ஒன்லைன் மூலம் கிடைக்கும் கடன் வசதி : மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையில் ஒன்லைன் மூலம் உடனடியாக கடன் பெற்றுக்கொள்ள முடியும் எனக் கூறி பாரிய ஊழல் மோசடி இடம்பெற்று வருவதாக ஊழலுக்கு எதிரான குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதன் அழைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலம் உடனடி கடன் வழங்கும் பல நிறுவனங்கள் குறித்து பொதுமக்களிடம் இருந்து தற்போது புகார்கள் வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு அவசர தேவைகளுக்காக இவ்வாறு கடனுதவி பெற்றவர்கள் கூறுகையில், ஆன்லைன் முறை மூலம் தகவல்களை பெறும் நிறுவனங்கள் அதிக வட்டிக்கு பணத்தை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடன் தொகையை விட மிகப் பெரிய தொகையை திருப்பிச் செலுத்த வேண்டிய வாங்குபவர்கள், அந்தத் தொகையை ஈடுகட்ட முடியாவிட்டால் அவர்களின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.