இலங்கையில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பு : மாற்று வழிகளை முன்வைப்பு!
இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது.
பெரிய வெங்காய ஏற்றுமதியாளரான இந்தியா, உற்பத்தி வீழ்ச்சியைத் தொடர்ந்து மூன்று மாதங்களில் உள்நாட்டு வெங்காய விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.
எனினும் விசேட ஏற்பாடுகளின் கீழ் இந்தியாவில் இருந்து 100,000 தொன் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு இலங்கை விலக்கு கோரியது.
ஆயினும் இந்த முயற்சி பலனளிக்கவில்லை, எனவே உள்ளூர் சந்தையில் விலைகள் அதிகமாகவே காணப்பட்டன. பெரிய வெங்காயத்தின் மொத்த விலை தற்போது கிலோ ரூ.350-375 ஆக உள்ளது.
இது தொடர்பில், அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பெரிய வெங்காயம் தற்போது பாகிஸ்தானில் இருந்து ஒரு தொன் 1200 அமெரிக்க டொலர்கள் விலையில் இறக்குமதி செய்யப்படுகிறது.
இதேவேளை, கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் தகவலின்படி, வெங்காயத்தின் ஏற்றுமதி தடை இன்னும் நீக்கப்படவில்லை.
எனவே இந்தியா இலங்கைக்கு ‘பெங்களூர் றோஸ் ஒனியன்’ எனப்படும் மற்றொரு வகை வெங்காயத்தை பரிந்துரைத்தது.
நாங்கள் அதை இங்குள்ள வர்த்தக அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளோம். இது மற்றொரு வகையான வெங்காயம் எனவும் தெரிவித்தார்.