தொடரும் கனடா – இந்தியா பிரச்சினை : வெறுப்புணர்வு செயற்பாடுகள் வேண்டாமே!
இந்திய-அமெரிக்கர்கள் குழு கனடாவில் இந்துக்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க கருத்துக்கள் மற்றும் விரோதமான சூழலைக் கண்டித்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரத்தை பயங்கரவாதச் சுதந்திரத்துடன் கலக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கனடாவில் உள்ள இந்துக்கள் நாட்டை விட்டு வெளியேறுமாறு காலிஸ்தான் அமைப்பு மிரட்டும் வகையில் உள்ள வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து இந்த கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
இந்த வெறுப்புணர்வு செயற்பாடு இருநாடுகளுக்கும் இடையில் மிகப் பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. தூதரவு உறவுகள் சீர்கெடுவதற்கும் இந்த விவகாரம் மூலக்காரணமாய் அமைந்தது.
இந்நிலையல், “கனேடிய மண்ணில் இந்துக்களின் புனித இடங்களை இழிவுபடுத்துவதன் மூலமும், வடுவை ஏற்படுத்துவதன் மூலமும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் இந்து கனேடியர்களை மீண்டும் மீண்டும் அச்சுறுத்துவதைப் பார்ப்பது கவலை அளிப்பதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தகைய மோசமான சம்பவங்களை எதிர்கொள்ளும்போது மௌனமாக இருப்பது குற்றங்களை அங்கீகரிப்பதற்கு சமமானது என ஒட்டாவாவிடம் கூறியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து சுதந்திரத்துடன் பயங்கரவாத சுதந்திரத்தை கலக்கக்கூடாது. அதற்கு பதிலாக தீவிரமயமாக்கல் மற்றும் போதைப்பொருள் கும்பல்களை நிறுத்த வேண்டும். மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை இராஜதந்திர ரீதியாக கையாள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.