.இலங்கையில் கொங்கிரீட் தூண் உடைந்து விழுந்ததில் ஒருவர் பலி!
இந்து கோவிலில் புனரமைப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவர் தலையில் கொங்கிரீட் தூண் உடைந்து விழுந்ததில் சம்பவ இடத்திலேயே அந்நபர் உயிரிழந்ததாக பண்டாரவளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பண்டாரவளை, கிரேக்வத்த மேல் பிரிவைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதுப்பித்தல் பணிகளுக்காக கோவிலின் பழைய பகுதிகளை அகற்றும் போது குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பண்டாரவளை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 4 times, 4 visits today)