இலங்கையில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி
கம்பஹா கௌடங்கஹா பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அங்கு, மகேவிட்ட பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய தம்மிதா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர் குறித்த நபரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





