பிலிப்பீன்சில் ஒருவருக்கு குரங்கம்மை பாதிப்பு

பிலிப்பீன்சில் ஒருவருக்குக் குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பிறகு, இதுவே பிலிப்பீன்சில் பதிவாகியிருக்கும் முதல் குரங்கம்மை பாதிப்பு.
இந்தத் தகவலை பிலிப்பீன்ஸ் சுகாதாரத்துறை ஆகஸ்ட் 19ஆம் திகதியன்று வெளியிட்டது.அது எத்தகைய கிருமிவகை என்பதை கண்டுபிடிக்க சோதனை நடத்தப்பட்டுள்ளது.
சோதனை முடிவுகளுக்காக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட 33 வயது பிலிப்பீன்ஸ் நபர், வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொண்டிருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
(Visited 38 times, 1 visits today)