இலங்கை

வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் பலி!

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தநபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதில் அவருக்கு  கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் பதவியா பிரதேசத்தை சேர்ந்த 55 நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்