இலங்கை

ஹலவத்த பகுதியில் தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு!

ஹலவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடொன்றிற்குள் தீப்பற்றியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (27.08) இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இலிப்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் சுமார் மூன்று வருடங்களாக தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், சகோதரி வீட்டில் இல்லாத நேரத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சடலம் ஹலவத்தை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹலவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!