கொழும்பின் பிரபல பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம்!

பாதுக்க பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பேய் நடமாட்டம் இருப்பதாக எழுந்துள்ள நம்பிக்கையினால் மாணவர்களும் ஆசிரியர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த பள்ளியில் படித்த விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும், அவருடைய ஆத்மா அந்த பாடசாலையில் சுற்றிவருவதாகவும் வதந்தி பரவி வருகிறது.
அண்மையில் எடுக்கப்பட்ட படம் ஒன்றில் உயிரிழந்த மாணவியின் நிழல் காணப்படுவதாகவும் இப்பாடசாலையின் வலைப்பந்தாட்ட அணி வீரர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மாணவர்களின் வருகையும் குறைந்துள்ளது.
எனவே இவ்வாறான நிலையில் யாராவது தலையிட்டு உண்மை நிலையை வெளிப்படுத்தி பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கல்வி கற்பிப்பது பொருத்தமானது எனவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர்.
(Visited 14 times, 1 visits today)