பெலியத்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பில் மேலும் ஒருவர் கைது!
பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
30 வயதுடைய குறித்த நபர்காலி ரத்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜன.23 அன்று, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த இன்டர்சேஞ்ச் அருகே, SUV வாகனத்தில் வந்த சிலர், வெள்ளை டிஃபென்டர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் 03 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் தற்போது நான்காவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





