வட அமெரிக்கா

2 மாதங்களில் அமெரிக்காவில் மேலும் ஒரு வங்கி திவால்! அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவில் சிலிக்கன் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகளைத் தொடர்ந்து, பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவாலாகியுள்ளது.

இந்த வங்கியை ஜெ பி மோர்கன் சேஸ் வங்கி வாங்கியுள்ளது.

அமெரிக்காவில் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிலிக்கன் வேலி வங்கி நிதி நெருக்கடியால் திவால் ஆனது. இந்த வங்கியைத் தொடர்ந்து சிக்னேச்சர் வங்கியும் திவால் ஆனது. இந்த நிலையில், 3வதாக, கடும் நிதிச்சிக்கலில் சிக்கியிருந்த, சான் பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிய பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியும் திவால் ஆகியுள்ளது.

இதையடுத்து இந்த வங்கியை ஜெ பி மோர்கன் சேஸ் வங்கி வாங்கியுள்ளது. பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி, திங்கட்கிழமை முதல் ஜெபி மோர்கன் சேஸ் வங்கியாக செயல்படும் என, பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள வங்கிகளில் 14வது பெரிய வங்கியாக திகழ்ந்த இந்த வங்கி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூகர்பர்க் உட்பட பெரும் பணக்காரர்களுக்கு கடன் கொடுத்திருந்தது, சிலிக்கன் வேலி மற்றும் சிக்னேச்சர் வங்கியைப் போலவே, இந்த வங்கியில் உள்ள டெபாசிட்களுக்கும் காப்பீடு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது.

இது முதலீட்டாளர்களை கவலையடையச் செய்திருக்கிறது. இந்த வங்கியில் 4,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிவதாக கூறப்படுகிறது.

(Visited 5 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்