தெற்கு சூடானில் ஒரு மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிப்பு
தெற்கு சூடானில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநாவின் மனிதாபிமான அமைப்பான ஓச்சா தெரிவித்துள்ளது.
அவர்களில் நான்கில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் உயரும் தண்ணீரால் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தவர்கள் உயரமான நிலங்களில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும், ஆனால் மழை காரணமாக தேவைப்படுபவர்களுக்கு உதவி கிடைப்பது கடினமாகிவிட்டதாகவும் ஓச்சா தெரிவித்துள்ளது.
11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தெற்கு சூடான் சமீபத்திய தசாப்தங்களில் அனுபவித்த மிக மோசமான வெள்ளப் பருவங்களில் இதுவும் ஒன்றாகும்.
கிழக்கில் உள்ள பிபோரில், 112,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர் என்று அங்குள்ள அரசாங்க நிவாரண நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ளத்தால் அச்சுறுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை “உள்ளூர் அதிகாரிகளால் அவர்களின் பாதுகாப்பிற்காக அடையாளம் காணப்பட்ட உயரமான இடங்களுக்கு உடனடியாக செல்ல” அரசாங்கம் வலியுறுத்துகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.