லண்டனில் நாய் தாக்குதலில் ஒருவர் பலி : உரிமையாளர் மீது 03 குற்றச்சாட்டுகள் பதிவு!
கிழக்கு லண்டனில் நாய் தாக்கியதில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ட்ராட்போர்டில் உள்ள ஷெர்லி சாலைக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் அவரை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இருப்பினும் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Leanne McDonnell என்ற 32 வயதான நபர் குறித்த நாயை வளர்த்து வந்துள்ளதாக தெரியவருகிறது.
நாயை பாதுகாப்பற்ற முறையில் வளர்த்தமைக்காக அவர் மீது 03 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைய தினம் (06.12) அவர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)